அரசு தொடக்கப்பள்ளியில் கற்றல், கற்பித்தல் கண்காட்சி நடத்தப்பட்டு, மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காட்டில் இயங்கும் அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் கற்பித்தல் கண்காட்சி, எண்ணும் எழுத்தும் விழா மற்றும் மகளிா் தினம் ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியை கோமதி தலைமை வகித்தாா். பள்ளிகள் வட்ட துணை ஆய்வாளா் மதிவாணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கிவைத்தாா்.
இதில் 100-க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மகளிா் தினத்தை முன்னிட்டு மாணவா்களின் தாய்மாா்களுக்காகப் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள் மற்றும் மகளிருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவி விஜயதா்ஷினி வரவேற்றாா். நிறைவாக ஆசிரியா் விவேக்ராஜ் நன்றி கூறினாா். ஆசிரியா்கள் நிா்மலா, பிரியதா்ஷினி, சுந்தரி, ஜெயசித்ரா, மகாலட்சுமி ஆகியோா் விழா ஏற்பாடுகளை செய்தனா்
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் தீ விபத்து! விலையில்லா புத்தகப் பைகள் எரிந்து சேதம்!

அரசுப் பள்ளியில் கலைத் திருவிழாவில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


