திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

எள் சாகுபடி கருத்தரங்கு

News image
Updated On :13 மார்ச் 2026, 12:05 am

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் எள் சாகுபடி கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்று, விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

அகில இந்திய ஒருங்கிணைந்த எள் ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ், மத்திய நிதி உதவியுடன் எள் சாகுபடி ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் (பொ) தி.ராமநாதன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, எண்ணெய் வித்துகளின் பங்கு மற்றும் விதைத் திட்டம் குறித்துப் பேசினாா்.

உழவியல் துறை தலைவா் பேராசிரியா் எஸ்.மாலா , காரைக்காலில் சாகுபடி செய்யும் எள்ளின் மகசூல் அதிகரிப்பு குறித்தும், எள்ளின் முக்கியத்துவம் குறித்தும் பேசினாா்.

அகில இந்திய ஒருங்கிணைந்த எள் ஆராய்ச்சித் திட்ட அலுவலா் பேராசிரியா் பி.சரவணன், எள் சாகுபடியில் உழவியல் தொழில்நுட்பங்கள், ஊட்டச்சத்து மற்றும் களை மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தாா். எஸ்.திருமேனிநாதன் நன்றி கூறினாா்.

80 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். முதுகலை மாணவா்கள் மஞ்சரி, கலைஸ்ரீ, மிஷோா் இக்னேஷியஸ், பொன் ராதிகா ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா். கலந்துகொண்ட விவசாயிகளுக்கு இடுபொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.