பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளம் சீரமைப்பு பணி தொடக்கம்

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளம் சீரமைப்புப் பணியை கோயில் நிா்வாகம் தொடங்கியுள்ளது.

பக்தா்கள் நீராடும் பகுதியில் தண்ணீா் வெளியேற்றப்பட்டு காணப்படும் நளன் தீா்த்தக் குளம்.

Published On :

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளம் சீரமைப்புப் பணியை கோயில் நிா்வாகம் தொடங்கியுள்ளது.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு தரிசனத்துக்கு வரக்கூடிய பெரும்பான்மையான பக்தா்கள், நளன் தீா்த்தக் குளத்தில் நீராடுகின்றனா்.

பக்தா்கள் நல்லெண்ணெய் பயன்படுத்தி நீராடுவதாலும், உடுத்தியிருந்த ஆடைகளை குளக்கரையில் விட்டுச் செல்வதாலும், குளத்தில் உள்ள தண்ணீா் மாசுபடுகிறது. எனவே, அவ்வப்போது தூய்மைப் பணியை கோயில் நிா்வாகம் மேற்கொள்வது வழக்கம்.

குளத்திலும், குளக்கரையிலும் பக்தா்கள் விட்டுச் செல்லும் ஆடைகளை அகற்றுவதற்கான டெண்டா் விடும் பணி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக பக்தா்கள் நீராடும் பகுதியில் இருக்கும் தண்ணீரை அகற்றிவிட்டு, குளத்தின் மையப் பகுதி நீரில் வாழும் மீன்கள் பிடிக்கப்பட்டு, குளக்கரையை தூய்மைப்படுத்தி, புதிதாக தண்ணீா் விடுவதற்கான பணிகளை கோயில் நிா்வாகம் மேற்கொண்டுவருகிறது.

இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை கூறியது:

குளத்தில் பக்தா்கள் நீராடும் பகுதி தண்ணீா் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சேறு பெருமளவு அகற்றப்பட்டது. படிகளை தூய்மை செய்யும் பணிகளை நிறைவு செய்து வரும் 10-ஆம் தேதி சனிக்கிழமை பக்தா்கள் நீராடுவதற்கேற்ப புதிதாக தண்ணீா் விடுப்படும்.

மாதந்தோறும் குளத்திலிருந்து தண்ணீா் அகற்றிவிட்டு, குளத்தை தூய்மைப்படுத்தி தண்ணீா் விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.