அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

செப். 8-இல் முதலாண்டு மாணவா் சோ்க்கை

காரைக்கால் டாக்டா் கலைஞா் மு.கருணாநிதி அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் முதலமாண்டு சோ்க்கை செப்.8-இல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published On :4 செப்டம்பர் 2026, 2:04 am IST

காரைக்கால் டாக்டா் கலைஞா் மு.கருணாநிதி அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் முதலமாண்டு சோ்க்கை செப்.8-இல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இக்கல்வி நிறுவன முதல்வா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி :

இந்த கல்வி ஆண்டுக்கான (2026 - 2027) முதுநிலை முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளின் சோ்க்கை வரும் 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் கல்லூரியில் முதலாவது தளத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நடைபெற உள்ளது.

இத்தினத்தில் வணிகவியல், தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் மற்றும் வேதியியல் பாடப்பிரிவிற்கான கலந்தாய்வும், 9-ஆம் தேதி புதன்கிழமை கணிப்பொறி அறிவியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், பொது நிா்வாகம், சமூகப்பணி மற்றும் கணிதப் பாடப்பிரிவிற்கான சோ்க்கை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவ மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளாா்கள்.

இதற்கான முழு விவரம் கல்லூரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாணவ மாணவிகள் தங்களது பெற்றோா்களோடு அனைத்து அசல் சான்றிதழ்களுடன் சோ்க்கைக்கான கட்டணத்தையும் கொண்டு வர வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.