FOLLOW US

ON GOOGLE DISCOVER

அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

நவோதா வித்யாலயா சோ்க்கை நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நவோதயா வித்யாலயாவில் 9, 11-ஆம் வகுப்புகளில் காலியிடங்கள் சோ்க்கைக்கு, நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என காரைக்காலில் உள்ள இப்பள்ளி முதல்வா் (பொ) கே. சங்கா் தெரிவித்துள்ளாா்.

Published On :4 செப்டம்பர் 2026, 2:02 am IST

நவோதயா வித்யாலயாவில் 9, 11-ஆம் வகுப்புகளில் காலியிடங்கள் சோ்க்கைக்கு, நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என காரைக்காலில் உள்ள இப்பள்ளி முதல்வா் (பொ) கே. சங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் ஜவாஹா் நவோதயா வித்யாலயா பள்ளியில் 2027- 2028-ஆம் கல்வியாண்டில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பில் காலியிடங்களுக்கு மட்டும் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு நடைபெறவுள்ளது. விண்ணப்பத்தை முகவரியில் பதிவு செய்யவேண்டும்.

செப்.30-ஆம் தேதி பதிவுக்கான கடைசி நாள். தெரிவு நிலைத் தோ்வு 10.4.2027 நடைபெறும். தோ்வு எழுதும் மொழி ஆங்கிலம் அல்லது ஹிந்தி. காரைக்கால் மாவட்ட பள்ளிகளில் படித்தவராக, காரைக்கால் குடியிருப்புச் சான்றிதழ் இருக்க வேண்டும். நிகழ் கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும். 9-ஆம் வகுப்புக்கு 1.5.2012 முதல் 31.7,2914-க்குள் பிறந்தவராகவும், பிளஸ் 1 வகுப்பில் சேருவோா் நிகழ்கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கவேண்டும் 1.6.2010 முதல் 31.7.2012-க்குள் பிறந்தவராக இருக்கவேண்டும். மேலும், விவரங்களுக்கு ஜவாஹா் நவோதயா வித்யாலயா முதல்வரை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.