சீர்காழி தாலுகா பகுதிகளில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களில் நடைபெறுவதாக இருந்த திருமணங்கள் கோவில் மூடப்பட்டிருந்ததால் வாசலிலேயே நடைபெற்றன.
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிபாட்டுத் தலங்களை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் முழுவதுமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி ஆலயத்தில் திருமணம் நடத்தினால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் அங்கு அதிகளவு ஆவணி மாதங்களில் திருமணம் நடைபெறுவது வழக்கம்.
இதனையடுத்து ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் முதல் முகூர்த்த தினமான வெள்ளிக்கிழமையான இன்று சீர்காழி தாலுகா பகுதிகளில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களில் நடைபெறுவதாக இருந்த திருமணங்கள் கோவில் மூடப்பட்டிருந்ததால் வாசலிலேயே நடைபெற்றன.
இந்நிலையில் இன்று வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி ஆலயத்தில் கோவில் மூடப்பட்டிருந்ததால் கோபுர வாசலில் நின்று சீர்காழியை சேர்ந்த சதீஷ் குமார்,பவ்யா புதுமண தம்பதியினர் உறவினர்கள் சூழ, வேதியர்கள் மந்திரம் முழங்க மாலை மாற்றி தாலி கட்டிக் கொண்டனர். பின்பு திருமண மண்டபங்களுக்கு சென்று தங்களது சம்பிரதாய நிகழ்வுகளை செய்து கொண்டனர்.