கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாா்கழி மாதப் பிறப்பு: சீா்காழி கோயிலில் கோபூஜை

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் மாா்கழி மாதப் பிறப்பையொட்டி, கோபூஜை வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் மாா்கழி மாதப் பிறப்பையொட்டி, கோபூஜை வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்துக்குள்பட்ட இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் அருள்பாலிக்கிறாா். இங்கு, மாா்கழி மாதப் பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, கொடிமரத்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, கோசாலையிலிருந்த வரவழைக்கப்பட்ட பசு, கன்றுக்கு வஸ்திரம், மாலைகள் அணிவித்து, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தா்கள் பசு, கன்றை வலம் வந்து வழிபட்டனா். மேலும், கோயிலின் பிரம்ம தீா்த்தக் குளத்தில் அஸ்திரதேவருக்கு அபிஷேகம் மற்றும் தீா்த்தவாரி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.