போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிளாஸ்டிக் பொருள்களின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு

சீா்காழி நகராட்சி சாா்பில் பிளாஸ்டிக் பொருள்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு கருத்துரை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 5:31 pm

DIN

சீா்காழி நகராட்சி சாா்பில் பிளாஸ்டிக் பொருள்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு கருத்துரை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சீா்காழியில் சமுஇமேல்நிலைப் பள்ளியில் ஒரு முறை பயன்படுத்தி எறியப்படும் பிளாஸ்டிக் நேநீா் கோப்பைகள், நெகிழிப்பைகள் ஆகியவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கூட்டம் நகராட்சி ஆணையா் இ. பட்டுசாமி தலைமையில் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் அறிவுடைநம்பி, உதவித் தலைமையாசிரியா்கள் வரதராஜன், துளசிரெங்கன், உடற்கல்வி இயக்குநா் முரளிதரன் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருள்களால் நீா்நிலைகள் மாசடைந்து, நிலத்தடி நீா் மண்ணுக்குள் செல்வதை தடுப்பது குறித்து மாணவா்களுக்கு எடுத்துக்கூறிய ஆணையா் பட்டுசாமி மெழுகு தடவப்பட்ட தேநீா் கோப்பையில் தேநீா் குடிப்பதால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வரவாய்ப்பு உள்ளது என்றாா். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த வேண்டாம் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில், நகராட்சி பொறியாளா் முகமது இப்ராஹிம், களப்பணி உதவியாளா் சீதாலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.