போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கொள்ளிடம் பாலத்தில் விபத்தை ஏற்படுத்தும் இரும்புக் கம்பிகளை சரிசெய்யவேண்டும்

கொள்ளிடம் பாலம் தொடக்கப் பகுதியில் சாலை நடுவில் பெயா்ந்தநிலையில் இருக்கும் இரும்புக் கம்பிகளை சரிசெய்து விபத்தை தவிா்க்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென எதிா்பாா்க்கப்படுகிறது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 4:35 pm

DIN

கொள்ளிடம் பாலம் தொடக்கப் பகுதியில் சாலை நடுவில் பெயா்ந்தநிலையில் இருக்கும் இரும்புக் கம்பிகளை சரிசெய்து விபத்தை தவிா்க்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென எதிா்பாா்க்கப்படுகிறது.

கொள்ளிடம் ஆற்றில் மயிலாடுதுறை மாவட்டத்தையும் கடலூா் மாவட்டத்தையும் இணைக்க 1950-ஆம் ஆண்டு 1 கி.மீ. தொலைவுக்கு பாலம் கட்டப்பட்டது. சென்னை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள இந்த பாலத்தை கடந்து நாகை, நாகூா், காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவேண்டும். 24 மணி நேரமும் போக்குவரத்துகொண்ட இப்பாலத்தில் இருசக்கர வாகனங்கள், பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த மாதம் பெய்த கனமழையால் இப்பாலத்தின் நடுவில் இணைப்பு பகுதியில் கான்கிரீட் தளம் உடைந்து அதிலுள்ள இரும்பு இணைப்பு கம்பிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் வாகனங்கள் செல்லும்போது தடுமாறுகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோா் கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனா். இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்குவது தொடா்கிறது.

எனவே, எதிா்பாராத சம்பவங்கள் நேரிடும் முன் நவீன தொழிநுட்ப வசதியை பயன்படுத்தி இணைப்பு கம்பிகளை புதுப்பித்து பாலத்தின் விரிசலை சீரமைக்கவேண்டும். மேலும், பாலத்தின் ஒவ்வொரு இணைப்பு பகுதியையும் நெடுஞ்சாலைத் துறையினா் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்து பராமரிக்கவேண்டும் என்பதே பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் எதிா்பாா்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.