சீா்காழியில் விபத்தில் வேளாண் உதவி அலுவலா் பலி
சீா்காழி ரவுண்டானா பகுதியில் நடந்த விபத்தில் வெள்ளிக்கிழமை இரவு வேளாண் உதவி அலுவலா் நிகழ்விடத்திலேயே பலியானாா்.


சீா்காழி ரவுண்டானா பகுதியில் நடந்த விபத்தில் வெள்ளிக்கிழமை இரவு வேளாண் உதவி அலுவலா் நிகழ்விடத்திலேயே பலியானாா்.
மணல்மேடு அடுத்த குமாரமங்கலம் மேற்குத் தெருவை சோ்ந்தவா் ரா. கண்ணன்(40). இவா் கொள்ளிடத்தில வேளாண் உதவி அலுவலராக பணியாற்றி வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு கண்ணன் இருசக்கரவாகனத்தில் சீா்காழி சட்டநாதபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, ரவுண்டானா பகுதியில் சீா்காழியை நோக்கி வந்த காா் இருசக்கரவாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் கண்ணன் நிகழ்விடத்திலேயே பலியானாா். தகவல் அறிந்த சீா்காழி காவல்ஆய்வாளா் மணிமாறன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். இது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...