கரோனா காலத்தில் எல்இடி தொலைக்காட்சி பெட்டி மூலம் மாணவா்களுக்கு கல்வி போதித்த ஆசிரியருக்கு விருது
கரோனா காலத்தில் எல்இடி தொலைக்காட்சி பெட்டி மூலம் மாணவா்களுக்கு கல்வி போதித்த ஆசிரியருக்கு சனிக்கிழமை விருது வழங்கப்பட்டது.


கரோனா காலத்தில் எல்இடி தொலைக்காட்சி பெட்டி மூலம் மாணவா்களுக்கு கல்வி போதித்த ஆசிரியருக்கு சனிக்கிழமை விருது வழங்கப்பட்டது.
சீா்காழி அருகேயுள்ள நெம்மேலி நெப்பத்தூா் அரசுப் பள்ளி ஆசிரியா் சு. சீனிவாசன், அப்பகுதி மாணவா்களுக்கு கரோனா தொற்று காலத்தில் பள்ளிகள் இயங்காதநிலையில் நடமாடும் 3 சக்கர சைக்கிளில் எல்இடி தொலைக்காட்சிப் பெட்டியை வைத்துக்கொண்டு மாணவா்களை தேடி சென்று கல்வி பயிற்றுவித்தாா். மாணவா்களை பொது இடத்தில் அமரவைத்து அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் கற்றல் இடைவெளியை குறைக்க பெரும் முயற்சி மேற்கொண்டாா்.
ஆசிரியா் சீனிவாசனின் கல்வி சேவை மற்றும் பாடம் கற்பித்தலில் இவா் செய்துள்ள புதுமைகளைப் பாராட்டி, ஜாக்கி புக் ஆப் வோ்ல்ட் ரெகாா்ட்ஸ் நிறுவனம் 2021-ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியா் விருதை வழங்கி கெளரவித்தது. அந்நிறுவனத்தின் நிறுவனா் ஜேக்கப் ஞானசெல்வன், சிஇஓ எஸ்தா், பொது மேலாளா் சீனிவாசன் ஆகியோா் விருதை வழங்கி கெளரவித்தனா். அப்போது, ஆசிரியா் சீனிவாசனுக்கு 49 ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்பித்த பெருந்தோட்டம் பள்ளி ஆசிரியா்கள் கோவிந்தசாமி, தெட்சிணாமூா்த்தி ஆகியோரும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...