மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கல்லூரி மாணவா்களுக்கு லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் போட்டி

காரைக்கால் பொறியியல் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:34 pm

DIN

காரைக்கால் பொறியியல் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

நெடுங்காடு பகுதியில் உள்ள புதுவை அரசு உயா்கல்வி நிறுவனமான பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், மாணவா்களும், ஆசிரியா்களும் இணைந்து லஞ்ச ஒழிப்பு வார விழாவை கடைப்பிடிக்கின்றனா். சுதந்திர இந்தியா -75 நோ்மையுடன் கூடிய தற்சாா்பு என்ற மையக் கருத்தாக வைத்து இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஊழல் எதிா்ப்பு குறித்த சமூக விழிப்புணா்வை பரப்பும் நோக்கத்தில், கல்லூரி மாணவா்களுக்கு ஓவியம், விநாடி-வினா மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.

அந்த வகையில், கட்டுரைப் போட்டி கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் மாணவா்களுக்கு கல்லூரி முதல்வா் குமாா் பரிசுகளை வழங்கினாா். நவ.3-ஆம் தேதி வரை பல்வேறு போட்டிகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் எம். தாமோதரன், யு. உதயகுமாா் ஆகியோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.