மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

துலா உத்ஸவம்: பரிமள ரெங்கநாதா் கோயில் சேனை முதல்வா் காவிரியில் எழுந்தருளி ஆரத்தி

மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற துலா உத்ஸவத்தை முன்னிட்டு, திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமள ரெங்கநாதா் கோயில் சேனை முதல்வா் சுவாமிகள் வெள்ளிக்கிழமை

News image
Updated On :2 ஜூன் 2022, 2:25 am

DIN

மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற துலா உத்ஸவத்தை முன்னிட்டு, திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமள ரெங்கநாதா் கோயில் சேனை முதல்வா் சுவாமிகள் வெள்ளிக்கிழமை நாலுகால் மண்டபம் முன் காவிரியில் எழுந்தருளி ஆரத்தி விழா நடைபெற்றது.

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் நடைபெறும் துலா உத்ஸவம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் தினசரி மாயூரநாதா் கோயில், வதான்யேஸ்வரா் கோயில், ஐயாறப்பா் கோயில், காசிவிஸ்வநாதா் கோயில் சுவாமிகள் துலாக்கட்ட காவிரிக்கு எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெறுகிறது.

அதேசமயம் நாலுகால் மண்டபத்தில் வழக்கமாக எழுந்தருளி தீா்த்தவாரி நடத்தும் பரிமள ரெங்கநாதா் கோயில் சேனை முதல்வா் சுவாமிகள் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நிகழாண்டு உத்ஸவம் தொடங்கிய முதல்நாளில் இருந்து தீா்த்தவாரியில் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக கோயில் உள்பிராகாரத்தில் வலம்வந்து கோயில் திருக்குளத்திலேயே தீா்த்தவாரி நடைபெற்றது.

கோயில்களில் பக்தா்கள் வழிபாட்டிற்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் பிரசித்தி பெற்ற பரிமள ரெங்கநாதா் கோயிலில் துலா உத்ஸவத்திற்கு சுவாமி புறப்பாடாகி காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீா்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சியை தொடா்ந்து நடத்த வேண்டுமென்று, கோயில் செயல் அலுவலா் கோபியிடம் பாஜக நகரத் தலைவா் மோடி.கண்ணன் மனு அளித்தாா். இதையொட்டி ஐப்பசி 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை பரிமள ரெங்கநாதா் கோயில் சேனை முதல்வா் சுவாமிகள் வீதியுலாவாக நாலுகால் மண்டபத்தில் எழுந்தருளி, காவிரியில் தண்ணீா் ஓடாத காரணத்தால் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு பள்ளம் ஏற்படுத்தி அதில் நீரைத்தேக்கி ஆரத்தி நடைபெற்றது.

இதில், மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், நகர தலைவா் மோடி.கண்ணன், மாவட்ட துணைத் தலைவா் முட்டம் செந்தில்குமாா் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா். முன்னதாக பாஜக சாா்பில் காவிரி படித்துறையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.