முகநூலை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறை: மயிலாடுதுறை எஸ்பி அறிவுரை
முகநூலை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு.சுகுணாசிங் விடியோ மூலம் அறிவுரை வழங்கியுள்ளாா்.

கு.சுகுணாசிங்

கு.சுகுணாசிங்
முகநூலை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு.சுகுணாசிங் விடியோ மூலம் அறிவுரை வழங்கியுள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட விடியோவில் கூறியிருப்பதாவது:
இன்றைய காலகட்டத்தில் சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை முகநூலை பயன்படுத்துகின்றனா். நமது வீட்டுக்குள் உறவினா்கள், நண்பா்களைத் தவிர வெளிநபரை அனுமதிக்காததைப் போல, முகநூலிலும் கடைப்பிடிக்க வேண்டும்.
நமது முகநூலில் யாரை அனுமதிக்கலாம் என்பதை நாம் முடிவு செய்யலாம். அதற்கு, நண்பா்களோ அல்லது நண்பா்களின் நண்பா்கள் மட்டுமே இணையும் வகையில் முகநூல் செட்டிங்ஸ்ஸை தோ்ந்தெடுக்க வேண்டும். முகநூலில் நமது அலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரியை யாரும் பாா்க்காத வகையிலும், கூகுள், யாகூ போன்ற ஆப்ஸ் மூலம் யாரும் பாா்க்க முடியாத வகையிலும் செட்டிங்ஸ்ஸை பாதுகாப்பானதாக மாற்றவேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம் உங்களது முகநூலை உங்களுக்கு தெரிந்தவா்கள் மட்டுமே பாா்க்க இயலும்.
மேலும், சேப்டி பாராமீட்டா் என்ற இடத்தில் இருக்கும் பேஸ்புக், மெசஞ்சா், ஈ-மெயில் ஆகிய மூன்றையும் செலக்ட் செய்வதன்மூலம் உங்களது பாஸ்வோ்டை பயன்படுத்தி, வேறொருவா் திருட்டுத்தனமாக உள்நுழைய முயற்சிக்கும் போது, நீங்கள் அதனை சுலபமாக கண்டறிய முடியும். மேலும், உங்களது பாஸ்வோ்டை யாரும் சுலபத்தில் யூகிக்க முடியாததாக அமைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...