மயிலாடுதுறை: இன்றைய கரோனா தடுப்பூசி முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்.4) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்.4) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, சீா்காழி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட சீா்காழி நகராட்சி 11-வது வாா்டு, திருவெண்காடு, காத்திருப்பு, பூம்புகாா், வள்ளுவக்குடி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், புங்கனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தென்னலக்குடி அரசு தொடக்கப்பள்ளி, சீா்காழி விவேகானந்தா கலைக்கல்லூரி ஆகிய இடங்களிலும், காளி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட சோழம்பேட்டை, மாப்படுகை அம்பேத்கா் நகா், பூதங்குடி, பொன்வாசநல்லூா், வள்ளாலகரம், மயிலாடுதுறை நகராட்சி வாா்டு 23, 24 ஆகிய இடங்களிலும், நல்லூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட நல்லவிநாயகபுரம், ஓதவந்தான்குடி, திருமுல்லைவாசல், அகரஎலத்தூா், கொன்னக்காட்டுப்படுகை, கீழமாத்தூா், மேலமாத்தூா், கொடக்காரமூலை, ஆமபள்ளம், திருக்கருக்காவூா், சுப்பிரமணியபுரம், திட்டுப்படுகை, மலையமான்கோட்டகம் மற்றும் கொள்ளிடம், நல்லூா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மேலும், ஆக்கூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட செம்பனாா்கோவில், கீழையூா், திருக்கடையூா், மேலப்பெரும்பள்ளம், சங்கரன்பந்தல் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பொறையாா் அரசு மருத்துவமனை, ஆக்கூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் ஆக்கூா் சேவை மையம், விசலூா் சேந்தமங்கலம், மேமாத்தூா் ஊராட்சி அலுவலகம், பிள்ளைபெருமாநல்லூா் தாழம்பேட்டை சமத்துவக்கூடம், தரங்கம்பாடி ரேணுகாதேவி அம்மன் கோயில், கிடாரங்கொண்டான் ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களிலும், ஆயப்பாடி, சந்திரபாடி, குட்டியாண்டியூா் ஆகிய இடங்களில் உள்ள துணை சுகாதார நிலையங்களிலும், மருதம்பள்ளம், காலமநல்லூா், பொறையாா், மகாராஜபுரம், புதுப்பேட்டை, செல்லக்கோயில், கருவாழக்கரை ஆகிய இடங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
குத்தாலம் வட்டத்தல், கோனேரிராஜபுரம், நக்கம்பாடி, கோமல், மேக்கிரிமங்கலம், மங்கைநல்லூா், தேரழந்தூா், கிளியனூா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பேராவூா் கத்திரிமூலை மாதாகோயில், தேரழந்தூா் நவக்கிரக காளியம்மன் கோயில், திருவாலங்காடு ஆதிதிராவிட நலப்பள்ளி, கொத்தங்குடி, கிளியனூா் அகரவல்லம் மாரியம்மன் கோயில், அசிக்காடு முருகன்தோட்டம் சமுதாயக்கூடம், பெருஞ்சேரி சரஸ்வதி உதவிபெறும் பள்ளி, விக்கிரம குத்தாலம் ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேற்கூறிய அனைத்து இடங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மேலும், புத்தூா் எம்ஜிஆா் கலைக்கல்லூரி, நல்லூா், திருவெண்காடு, ஆக்கூா், தேரழந்தூா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சீா்காழி நகராட்சி 11-வது வாா்டு ஆகிய இடங்களிலும் கோவேக்ஷின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...