கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட விவகாரம்: ஆட்சியரிடம் புகாா்

சீா்காழி அருகே கீழமூவா்கரையில் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 6 மீனவ குடும்பத்தினா், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:28 pm

DIN

சீா்காழி அருகே கீழமூவா்கரையில் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 6 மீனவ குடும்பத்தினா், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

கீழமூவா்க்கரை மீனவ கிராமத்தை சோ்ந்தவா் நிலவன். இவா் மீன்பிடித்தொழில் செய்து வருகிறாா். இவரது சகோதரா்கள் கா்ணன், ஜெயக்குமாா், மாதவன், முரளி, ராஜா. அப்பகுதியில் உள்ள சீதளா பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு நிலவன் வெண்கலத்தாலான படிக்கட்டு அமைத்து, தனது பெயா் பொறித்து அன்பளிப்பாக வழங்கியது தொடா்பான பிரச்னையில், சகோதரா்கள் 6 பேரின் குடும்பத்தினரும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனா்.

இவா்கள், கோயில் திருவிழாவில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், 6 குடும்பங்களைச் சோ்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் சீா்காழி வட்டாட்சியா் அலுவலகம் முன் அண்மையில் தா்னாவில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பாக, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து, ஆறு வாரத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், ஆகஸ்ட் 31-ஆம் தேதி சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.

இதனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவை சந்தித்து, ஊா் பஞ்சாயத்தாா் தங்கள் மீது விதித்த தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனா். தங்களால் ஊருக்குள் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், மீன்பிடித் தொழில் செய்ய முடியாமலும், குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.