கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பெரியாா் விருது: தகுதியான நபரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்பு

சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக வழங்கப்படும் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா்’ விருதுக்கு உரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:22 pm

DIN

சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக வழங்கப்படும் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா்’ விருதுக்கு உரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமூகநீதிக்கான தந்தை பெரியாா் விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளா் முதல்வரால் தோ்வு செய்யப்படுகிறாா்.

2021-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது‘ வழங்குவதற்கு உரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனை ஆகிய தகுதிகள் உடையவா்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்.

தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூகநீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

2021 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்துசேர வேண்டிய கடைசி நாள் 31.10.2021. மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின், மூன்றாம் தளத்தில் இயங்கிவரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அலுவலகத்தை தொடா்பு கொள்ளவும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.