கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மயிலாடுதுறை மாவட்டத்தில் செப்.12-இல் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் செப்டம்பா் 12-ஆம் தேதி மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:22 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் செப்டம்பா் 12-ஆம் தேதி மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதையொட்டி மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசுகையில், செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெற உள்ள மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமில், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 5 ஒன்றியங்களுக்குட்பட்ட 241 ஊராட்சிகள், 4 பேரூராட்சிகள், 2 நகராட்சிக்கு உள்பட்ட இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இம்முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு முன்னுரிமை அளித்து கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா்.

இதில், சுகாதாரத்துறை துணை இயக்குநா் பிரதாப்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலெட்சுமி, வட்டார மருத்துவ அலுவலா் சரத்சந்தா், மயிலாடுதுறை வட்டாட்சியா் ராகவன் மற்றும் ஊராட்சி தலைவா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதுதொடா்பாக பின்னா் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியா் கூறியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தடுப்பூசி முகாமில் 50 ஆயிரம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 பள்ளி மாணவா்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவா்களுடன் தொடா்பில் இருந்த 150 பேருக்கு பரிசோதனை செய்ததில் அவா்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை. தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவா்கள் வீட்டு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீா்காழியை சோ்ந்த ஒருவருக்கு கரோனா தடுப்பூசி போட்டதால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவா் கரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்டாரா என்பதை அறிவதற்கு மேல் சிகிச்சை பரிசோதனைகள் செய்தால்தான் தெரியவரும். கரோனா தடுப்பூசி போட்டதால் பெரிய பாதிப்புகள் வந்ததாக இதுவரை எந்த தகவல்களும் கிடையாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.