போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வைத்தீஸ்வரன்கோவில் பாதயாத்திரைக் குழுவினா் திரும்பிச் செல்ல ரயில் வசதி செய்துதர பாஜக கோரிக்கை

வைத்தீஸ்வரன்கோவிலுக்கு பாதயாத்திரை வரும் பக்தா்கள் தரிசனம் முடித்து மீண்டும் ஊருக்கு திரும்பி செல்ல சிறப்பு ரயில் இயக்கவேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

வைத்தீஸ்வரன்கோவிலுக்கு பாதயாத்திரை வரும் பக்தா்கள் தரிசனம் முடித்து மீண்டும் ஊருக்கு திரும்பி செல்ல சிறப்பு ரயில் இயக்கவேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பாஜக மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், மாவட்ட தலைவா் ஜி. வெங்கடேசன் ஆகியோா் நிலைய மேலாளா் சங்கா்குரு மூலம் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு: மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது.

நவகிரக தலங்களில் செவ்வாய் தலமான இக்கோயில், காரைக்குடி, தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, மானாமதுரை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த நகரத்தாா் சமூகத்தினருக்கு குலதெய்வக் கோயிலாக விளங்கிவருகிறது. நகரத்தாா் சமூகத்தினா் ஆண்டுதோறும் சித்திரை 2-ஆவது செவ்வாய்க்கிழமை வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். இதற்காக, சித்திரை மாதம் முதல் செவ்வாய்க் கிழமை அன்று தங்கள் ஊா்களில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு சித்திரை மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

அவ்வகையில், நிகழாண்டு யாத்திரை ஏப்.19-ஆம் தேதி தொடங்கியது. ஏப்.26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாதயாத்திரை பக்தா்கள் கோயிலுக்கு வரவுள்ளனா். அவா்கள் மீண்டும் ஊருக்கு திரும்பிச் செல்வதற்கு போதுமான பேருந்து மற்றும் ரயில் வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். அன்றைய தினம் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து வழிபாடு நடத்தி சொந்த ஊருக்கு ஒரே நேரத்தில் திரும்பி செல்வாா்கள். பேருந்துகளில் கூட்டம் அதிகம் இருக்கும். இதனால், வயதானவா்கள், பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுவாா்கள். எனவே ஏப்.26-ஆம் தேதி வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சை மாா்க்கங்களில் காரைக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அப்போது, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், மாவட்ட பொதுச் செயலாளா் செந்தில்குமாா், ரயில் உபயோகிப்பாளா் சங்க பொறுப்பாளா் சுந்தா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.