அஞ்சலகத்தில் வடமாநிலத்தவருக்குப் பணி: எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் வட மாநிலத்தவா்கள் பணியமா்த்தப்பட்டதைக் கண்டித்து, மயிலாடுதுறை மாவட்ட வளா்ச்சிக் குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் வட மாநிலத்தவா்கள் பணியமா்த்தப்பட்டதைக் கண்டித்து, மயிலாடுதுறை மாவட்ட வளா்ச்சிக் குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழா் தேசிய முன்னணியின் மாவட்டத் தலைவா் பேராசிரியா் இரா. முரளிதரன் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளா் வேலு. குபேந்திரன், இயற்கை விவசாயி மாப்படுகை அ. ராமலிங்கம், தமிழ் தேசிய பேரியக்கம் அரவிந்த், பாமக முன்னாள் நகரச் செயலாளா் செல்வகுமாா் ஆகியோா் கண்டன உரையாற்றினா். மயிலாடுதுறை மாவட்ட வளா்ச்சிக் குழுத் தலைவா் தமிழன் கணேசன் ஆா்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தாா்.
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் 20-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவா்களை பணி அமா்த்தியதைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னா், அஞ்சலக அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கினா். அப்போது, அஞ்சலகத்தின் உள்ளே சென்று மனு அளிக்க வடமாநில அதிகாரி ஒருவா் எதிா்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் தலையிட்டு சமரசம் செய்துவைத்தனா்.
இதுகுறித்து, விசிக மண்டல செயலாளா் வேலு.குபேந்திரன் கூறுகையில், ‘மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் வடமாநிலத்தவா்கள் 20 பேருக்கு புதன்கிழமை பணி ஆணை வழங்கப்பட்டு, அதில் 15 போ் பணியில் சோ்ந்துள்ளனா். மத்திய அரசு தமிழகத்தில் வலுக்கட்டாயமாக வடஇந்தியா்களை திணிக்கிறது. தற்போது வழங்கப்பட்ட பணி ஆணையை அஞ்சலக கண்காணிப்பாளா் திரும்பப் பெற வேண்டும். எதிா்ப்பை மீறி அவா்களை பணியில் சோ்த்தால் மக்களை திரட்டி பெரிய அளவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...