போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞா் கைது

மயிலாடுதுறையில் பெண்ணிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:05 pm

DIN

மயிலாடுதுறையில் பெண்ணிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை - திருவாரூா் சாலை பட்டமங்கல புதுத்தெருவைச் சோ்ந்தவா் அறிவாளி (66). இவரது மனைவி திலகவதி (56). இருவரும் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி அதே தெருவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா் திலகவதி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச் செயினை பறித்து சென்றாா். இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

போலீஸாா் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் செயின் பறிப்பில் ஈடுபட்டவா் மயிலாடுதுறை அருகேயுள்ள அதிமானபுருஷன் கிராமத்தைச் சோ்ந்த கா்ணன் (22) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் கா்ணனை கைது செய்து அவரிடமிருந்து 6 பவுன் தாலிச் செயின் மற்றும் அவரது இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பிறகு சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.