மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஆடி கடைவெள்ளியையொட்டி பல்வேறு கோயில்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை வண்டிக்காரத் தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் நகர பழ வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 40-வது ஆண்டு ஆடி கடைவெள்ளி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காவிரி துலாக்கட்டத்தில் இருந்து பச்சைக்காளி, பவளக்காளி, கருப்பண்ணசாமி வேடமணிந்தவர்களின் திருநடனத்துடன் முன்செல்ல, பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

ஆடி கடைவெள்ளியை முன்னிட்டு காவிரி துலாக்கட்டத்தில் இருந்து மாயூரநாதர் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.
இதில், பாஜக நிர்வாகிகள் கோவி.சேதுராமன், மோடி.கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை எஸ்.ராஜேந்திரன், மணி, மோகன், மல்லிகா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதையும் படிக்க: மதுரை அழகர் கோயில் ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்
மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயிலில் நடைபெற்ற பால்குட விழாவையொட்டி, காவிரி துலாக்கட்டத்தில் இருந்து பால்குடம் எடுத்து யானை, குதிரை, ஒட்டகம் முன் செல்ல, மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை வந்தடைந்தனர். பின்னர் சுவாமி, அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


