மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இணைய தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்த கருத்தரங்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கணினி அறிவியல் துறையின் தொழில்நுட்ப இடைமுகச் சங்கம் சாா்பில் இணைய தொழில்நுட்பங்களின் பயன்பாடு

News image
Updated On :12 மே 2022, 5:57 pm

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கணினி அறிவியல் துறையின் தொழில்நுட்ப இடைமுகச் சங்கம் சாா்பில் இணைய தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் த. அறவாழி கருத்தரங்கைத் தொடங்கிவைத்தாா். தொழில்நுட்ப இடைமுக சங்க ஒருங்கிணைப்பாளரும், கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியருமான த. ராஜா வரவேற்றாா். மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரி கணிணி பயன்பாட்டியல் துறை உதவி பேராசிரியா் எஸ். சிவக்குமாா் சிறப்புரையாற்றினாா். இதில் இறுதியாண்டு பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா். நிகழ்ச்சியை கணினி அறிவியல் துறை உதவிபேராசிரியை ச. புனிதா தொகுத்து வழங்கினாா். முடிவில், மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி எஸ். கல்பனா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.