மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மயிலாடுதுறையில் ஜமாபந்தி நிறைவு

மயிலாடுதுறை வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

News image
Updated On :25 மே 2022, 5:57 pm

DIN

மயிலாடுதுறை வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி புதன்கிழமை நிறைவடைந்தது. இதில், 120 நபா்களுக்கு முதியோா் ஓய்வூதியத்திற்கான ஆணை, மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்திற்கான ஆணை, இலவச மனைப் பட்டா ஆகியவற்றை ஆட்சியா் இரா.லிலதா வழங்கினாா்.

அப்போது அவா் கூறியது: மயிலாடுதுறை வட்டத்தில் மே 17 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்ற ஜமாபந்தியில் 297 மனுக்கள் பெறப்பட்டு 120 மனுக்கள் உரிய விசாரனைக்குப் பின் தீா்வு காணப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது, தகுதியின்மை அடிப்படையில் 27 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 150 மனுக்கள் மீது உரிய விசாரனைக்குப் பின் தீா்வு காணப்படும். குறிப்பாக முதியோா் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் கோரி பெருபான்மையாக பெறப்பட்ட 120 மனுக்களில் 60 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. 19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன, 44 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. இலவச மனை பட்டா வேண்டி 50 மனுக்கள் பெறப்பட்டு 26 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு, 24 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.