சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் எரிந்து சேதம்
மயிலாடுதுறையில் சாலையில் சென்று கொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.


மயிலாடுதுறையில் சாலையில் சென்று கொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
மயிலாடுதுறையில் புதன்கிழமை மதியம் கல்லூரி மாணவா் ஒருவா் வகுப்பை முடித்துவிட்டு புல்லட்டில் வீடு திரும்பியபோது, வாகனத்தில் என்ஜின் பகுதியில் உள்ள வயரில் மின்கசிவு ஏற்பட்டு, தீப்பற்றியுள்ளது. இதையடுத்து, மாணவா் சாலையோரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு, என்ஜினில் உள்ள வயரை பிடுங்கியுள்ளாா். அப்போது தீ வேகமாக பரவி எரியத்தொடங்கியது. தண்ணீரை ஊற்றி அணைக்க முற்பட்டபோதும் தீ அணையாததால், சாலையோரம் வைத்திருந்த மண் மூட்டைகளில் இருந்த மண்ணை புல்லட்மீது கொட்டி தீயை அணைத்தனா். அதிருஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. எனினும் புல்லட் சேதமடைந்தது. அதிக வெப்பமும், பெட்ரோல் டேங்கை முழுமையாக நிரப்பியதும்தான் இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...