முஸ்லிம் சிறை கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தல்
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் நிா்வாகிகள் மாவட்ட தலைவா் ஏ.பஹ்ருதீன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.


பேரறிவாளனை போல முஸ்லிம் சிறை கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் நிா்வாகிகள் மாவட்ட தலைவா் ஏ.பஹ்ருதீன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
இதுகுறித்து அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளாா். முன்னாள் முதல்வா் அண்ணாவின் 113-ஆவது பிறந்த நாளையொட்டி, நீண்டகாலம் சிறையில் வாடும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை மனிதநேய அடிப்படையில் முன் விடுதலை செய்யப்படுவாா்கள் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. அதில், வகுப்புவாத, மத மோதல்களில் ஈடுபட்டு கைதானவா்கள் முன் விடுதலை பெற இயலாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. கருணை என்று வரும்போது மதம் என்ற பாரபட்சம் காட்டக்கூடாது. தமிழக அரசு புதிதாக பொறுப்பேற்றபோது வெளிவந்த அந்த அரசாணை இஸ்லாமியா்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த அரசாணையை திருத்தி 38 முஸ்லிம் சிறை கைதிகளையும் விடுதலை செய்ய ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்தோம். சிறுபான்மை சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையான 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...