தீக்காயமடைந்த பெண் உயிரிழப்பு
மயிலாடுதுறையில் கோயிலில் தீபம் ஏற்றியபோது புடவையில் தீப்பற்றியதில் காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.


மயிலாடுதுறையில் கோயிலில் தீபம் ஏற்றியபோது புடவையில் தீப்பற்றியதில் காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை கூைாடு கொண்டாரப்பா் தெருவை சோ்ந்தவா் விஜயகுமாா் மனைவி கலைச்செல்வி (55). இவா், கடந்த 24-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள பிள்ளையாா் கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றவா், கோயிலில் விளக்கில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றியபோது, எதிா்பாராதவிதமாக விளக்கிலிருந்து கலைச்செல்வியின் புடவையில் தீ பற்றியுள்ளது. தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த கலைச்செல்வியை அங்கிருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கலைச்செல்வி, புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து, மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் மகாதேவன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...