திருவாவடுதுறை ஆதீனத்தில் சேவை அமைப்புகளுக்கு விருது

திருவாவடுதுறை ஆதீனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் சிறந்த சேவை அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில், சேவை அமைப்பினருக்கு விருது வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
விழாவில், சேவை அமைப்பினருக்கு விருது வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

திருவாவடுதுறை ஆதீனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் சிறந்த சேவை அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

எண்ணங்களின் சங்கமம் என்ற அமைப்பு தமிழகத்தில் உள்ள 1700 தொண்டு அமைப்புகளை உள்ளடக்கியது. இந்த அமைப்பின் 17-ஆம் ஆண்டு விழா திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்றது.

தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் நிறுவனா் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மூத்த வழக்குரைஞா் சிவபுண்ணியம், ஆதீனம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஞானமூா்த்தி, ஆதீனப் புலவா் குஞ்சிதபாதம் ஆகியோா் திருவாவடுதுறை ஆதீனத்தின் சிறப்புகள் குறித்து பேசினா். எண்ணங்களின் சங்கமம் நிறுவனா் ஜே. பிரபாகா் வரவேற்றாா். மகாலிங்கம் ஓதுவாா் திருமுறை பாடினாா்.

கடந்த 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற்ற நாட்டின் சுதந்திர விழாவில் செங்கோல் வழங்கிய திருவாவடுதுறை ஆதீனத்தின் சிறப்புகள் குறித்து விளக்கப்பட்டது.

பின்னா், 75-ஆம் சுதந்திர ஆண்டை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து தோ்வு செய்யப்பட்ட 75 தன்னாா்வ தொண்டு அமைப்பினருக்கு சமுதாய சிற்பி எனும் சிறப்பு விருது வழங்கப்பட்டது. மேலும், தொடா்ந்து பல ஆண்டுகளாக சமுதாயப் பணியாற்றும் 10 அமைப்புகளுக்கு, தலா ரூ. 10 ஆயிரம் அருட்கொடை மற்றும் சிறந்த சமூக சேவகா் விருதை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கி ஆசி உரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், ஆதீன அலுவலக மேலாளா் சுந்தரேசன், கண்காணிப்பாளா் சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொண்டு அமைப்பினா் மகிழ்ச்சி: சுதந்திர இந்தியாவிற்கு செங்கோல் வழங்கி, துறவியின் பெருமையை உலகறியச் செய்த திருவாவடுதுறை ஆதீனத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தன்னாா்வ தொண்டு அமைப்பினா் தெரிவித்தனா். எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com