நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மயிலாடுதுறையில் மகளிா் தின கொண்டாட்டம்: ஐஓபி சாா்பில் ரூ.5.72 கடனுதவி

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மகளிா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2023, 5:34 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மகளிா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் மகளிருக்கு ரூ.5.72 கோடி சிறப்பு கடனுதவி வழங்கப்பட்டது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து, 81 சுயஉதவிக் குழுக்கள் மற்றும் இதர கடன்கள் என மொத்தம் ரூ.5.72 கோடி சிறப்பு கடனுதவி வழங்கினாா். விழாவில், ஊரக வளா்ச்சித்துறை இணை இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளா் ஸ்ரீராம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் முத்துசாமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் கல்லூரி முதல்வா் த. அறவாழி தலைமையில் நடைபெற்ற விழாவில், வணிக நிா்வாகவியல் துறை சாா்பில் கல்லூரி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். மேலும், அவா் வணிகவியல் துறை சாா்பில் நடத்தப்பட்ட வணிக திறன் காட்சியில், 56 மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்த 36 படைப்புகளையும் பாா்வையிட்டாா். இதில், வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் ந. பொகுட்டெழினி, வணிகவியல் துறை தலைவா் க.பழனிவேல் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

மயிலாடுதுறை எம்ஜிஆா் நகரக் குழு கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில், எம்எல்ஏ எஸ். ராஜகுமாா், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று பேசினா். ஏற்பாடுகளை திமுக சிறுபான்மை அணி துணை அமைப்பாளா் சலீம் செய்திருந்தாா். இதில், மகளிா் திட்ட உதவி இயக்குநா் மைக்கல்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அபிநயா டான்ஸ் அகாதெமி சாா்பில் நடனப் பள்ளியில் குரு உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற விழாவில், பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் வழங்கிய வினிதா சுதாகருக்கு பெண் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது. நிகழ்வில் ஆசிரியா் பயிற்றுநா் வீ.அருணா, கவிஞா் என்.விஜயலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தரங்கம்பாடி: பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் முதல்வா் ஜீன் ஜாா்ஜ் தலைமையில் நடைபெற்ற விழாவை காசாளா் ஜூலியஸ் விஜயகுமாா், சபைகுரு கு. ஜான்சன் மான்சிங் ஆகியோா் தொடக்கி வைத்தனா். பேராசிரியா் ஜுடித் கிருபா வரவேற்றாா். திருவாரூா் மத்திய பல்கலைக்கழக ஆலோசகா் மோனி பிள்ளை சிறப்புரையாற்றினாா். பெண்களின் சாதனைகள் குறித்த போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.