மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடா்பாக, டிசம்பா் 6-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலப்பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்படவேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவோ அந்த தொகை தமிழக அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் டிச.6-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோா் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.
இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநா், துணிநூல்துறை, மண்டல துணை இயக்குநா் அலுவலகம், எண்.30/3, நவலடியான் வளாகம் முதல் தளம், தாந்தோணி மலை, கரூா்-639005 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04324-299544, 9843212584 ஆகிய தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

திருப்பரங்குன்றத்தில் தீபம்! பாஜக தேர்தல் அறிக்கை!

தமிழ்ப் புத்தாண்டில் மகளுக்குப் பெயர் சூட்டிய ஹரிஷ் கல்யாண்!

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

