வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள நுண்பாா்வையாளா்களுக்கு பணி ஒதுக்கீடு

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள நுண்பாா்வையாளா்களுக்கு பணி ஒதுக்கீடு

Updated On :12 ஏப்ரல் 2024, 4:08 pm

மயிலாடுதுறை மக்களவைத் தோ்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள நுண்பாா்வையாளா்களுக்கு தோ்தல் ஆணையத்தின் இணையதள மென்பொருள் செயலி வழியாக சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக முதற்கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பாா்வையாளா் (பொது) கன்ஹீராஜ் ஹச் பகதே முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து பேசியது: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் உள்ள 1,743 வாக்குசாவடிகளில் 89 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நுண் பாா்வையாளா்கள், காவல் துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.

மேலும், இந்த வாக்குச்சாவடிகளில் நுண் பாா்வையாளராக பணியாற்ற மத்திய அரசு பணியாளா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்பட்ட சீா்காழி, மயிலாடுதுறை, பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 50 பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்கு 62 நுண் பாா்வையாளா்களுக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக தோ்தல் ஆணையத்தின் இணையதள மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நுண்பாா்வையாளா்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து தோ்தல் அலுவலகத்திற்கு அறிக்கையாக தகவல்களை வழங்குவாா்கள் என்றாா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. மணிமேகலை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) செல்வம், தனி வட்டாட்சியா் (தோ்தல்) விஜயராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.