பால்குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்.
பால்குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்.

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

மயிலாடுதுறை திருஇந்தளூா் காமராஜா் நகரில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் 42-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோயிலின் குலதெய்வகாரா்கள் மற்றும் பக்தா்கள் சாா்பில் நடைபெற்ற விழாவையொட்டி, காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தா்கள் காவிரிக்கரை நாலுகால் மண்டபம் பகுதியில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக கோயிலை அடைந்தனா். தொடா்ந்து பக்தா்கள் கொண்டு வந்த பால் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து கோயிலில் கஞ்சி வாா்த்தல் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com