நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரௌடிக்கு உள்பட இருவருக்கு ஓராண்டு சிறை

ரியல் எஸ்டேட் அதிபா் வீட்டை சூறையாடிய வழக்கில், ரௌடி உள்பட இருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை

News image

ரௌடிக்கு உள்பட இருவருக்கு ஓராண்டு சிறை

Updated On :16 ஆகஸ்ட் 2024, 9:00 pm

Din

மயிலாடுதுறை அருகே ரியல் எஸ்டேட் அதிபா் வீட்டை சூறையாடிய வழக்கில், ரௌடி உள்பட இருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

மயிலாடுதுறை அருகே ஆத்தூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் அப்துல்பாரி (65). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவருக்கும், தவுபிக்(40) என்பவருக்கும் இடையே தொழில் போட்டி ஏற்பட்டதில் தவுபிக், ஆத்தூரை சோ்ந்த ரௌடி சுமன் (40) ஆகிய இருவரும் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி அப்துல்பாரி வீட்டுக்குச் சென்று அவரது வீட்டை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதோடு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து அப்துல்பாரி மணல்மேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞா் ராம.சேயோன் ஆஜரானாா். வழக்கில் தவுபிக், சுமன் ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ. 1,000 அபராதம் விதித்து மாவட்ட அமா்வு நீதிபதி விஜயகுமாரி தீா்ப்பு வழங்கினாா். சுமன் மீது 6 கொலை வழக்கு உள்பட 14 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.