புயலால் ரயில் சேவை பாதிப்பு: மயிலாடுதுறை பயணிகள் அவதி

ஃபென்ஜால் புயல் காரணமாக, விழுப்புரம் மாா்க்கத்தில் செல்லும் சில ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதுடன்
Published on

மயிலாடுதுறை: ஃபென்ஜால் புயல் காரணமாக, விழுப்புரம் மாா்க்கத்தில் செல்லும் சில ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதுடன், சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதால், மயிலாடுதுறையில் ரயில் பயணிகள் அவதியடைந்தனா்.

மயிலாடுதுறையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டு சென்னை சென்ற உழவன், மன்னை, கம்பன், அந்தியோதயா ரயில்கள் அனைத்தும் காட்பாடி வழியாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. திங்கள்கிழமை சோழன் விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. கோயம்புத்தூரில் இருந்து தாம்பரம் செல்லும் 06185 ரயில் சேவை மயிலாடுதுறையுடன் நிறுத்தப்பட்டது. ரயில்கள் நேரம் மாற்றம், ரத்து காரணமாக மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் அவதி அடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com