கூத்தியம்பேட்டை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து  அமைக்கப்பட்ட குடிசைகள்.
மயிலாடுதுறை
கொள்ளிடம் அருகே கோயில் இடத்தில் அமைக்கப்பட்ட குடிசைகள் அகற்றம்
கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில்  அமைக்கப்பட்ட 25 குடிசைகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன. 
சீா்காழி: கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட 25 குடிசைகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
கூத்தியம்பேட்டை கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. மிகவும் பழைமை வாய்ந்த இக்கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து 25 குடிசைகள் அமைத்தனா். அந்த இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியையும் கட்டி வைத்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதி, வருவாய் ஆய்வாளா் குணவதி, கிராம நிா்வாக அலுவலா் பாக்கியலட்சுமி, கொள்ளிடம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 25 குடிசைகளையும் அகற்றினா்.

