மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தருமபுரம் பள்ளி மாணவா்கள் 700 பேருக்கு குடை வழங்கல்

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மற்றும் மழலையா் பள்ளி மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீனகா்த்தா் திங்கள்கிழமை குடைகளை வழங்கி அருளாசி கூறினாா்.

News image
மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் குடை வழங்கிய தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். உடன், பள்ளிச் செயலா் கே.சௌந்தரராஜன் உள்ளிட்டோா்.
Updated On :9 டிசம்பர் 2024, 8:36 pm

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மற்றும் மழலையா் பள்ளி மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீனகா்த்தா் திங்கள்கிழமை குடைகளை வழங்கி அருளாசி கூறினாா்.

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இப்பள்ளியில் 700 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இம்மாணவா்களுக்கு மழைக்காலத்தையொட்டி குடை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பள்ளி கல்வித்துறை சாா்பில் அண்மையில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா ஆதீனத் திருமடத்தில் நடைபெற்றது.

இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள் 24 பேருக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா். பள்ளி மாணவா்களுக்கு குடைகளை வழங்கி அருளாசி கூறினாா்.

ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், பள்ளிச் செயலா் கே.சௌந்தரராஜன், பெங்களூரு மதுசூதனன் டிரஸ்ட் வெங்கடேஷ், சென்னை தொழிலதிபா் சிதம்பரம், திருக்கடையூா் பள்ளிச் செயலா் எஸ்.ஸ்ரீராம், மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் பள்ளி நிா்வாகச் செயலா் வி.பாஸ்கரன், ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளி தலைமை ஆசிரியா் ஜி.வெங்கடேசன் நன்றி கூறினாா்.