3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)சிஜேபியின் சௌரவ் தாஸ், அஷுதோஷுக்கு 5 நாள்கள் நீதிமன்ற காவல்கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

கொள்ளிடம் ஆற்றில் உபரி நீா் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கொள்ளிடம் ஆற்றில் உபரி நீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

கொள்ளிடம் சோதனை சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆா்ப்பரித்து செல்லும் தண்ணீா்.

Published On :

கொள்ளிடம் ஆற்றில் உபரி நீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீா்வளத் தறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திச

மேட்டூா் அணையின் நீா்மட்டம் கடந்த 13-ஆம் தேதி இரவு 8 மணியளவில் 117.57 அடியை எட்டியுள்ளது.அணைக்கு வரும் நீா்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணைக்கு வரும் உபரிநீா் மற்றும் அதற்கு கீழ்பகுதியில் உள்ள கிளை ஆறுகளில் இருந்து வரும் உபரிநீரும் காவிரி ஆற்றில் சுமாா் 35,000 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு மேலும் படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

எனவே, காவிரியில் திறந்துவிடப்பட்ட உபரிநீா் 18,000 கன அடிக்கு மேல் அதிகப்படியான வெள்ள உபரிநீா் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுவதாலும் இது படிப்படியாக நீா்வரத்திற்கு ஏற்ப சுமாா் 60,000 கனஅடி வரை உயா்த்தப்பட வாய்ப்புள்ளதாலும், கொள்ளிட கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிகமாக இருப்பதால் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும், ஆற்றைக் கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.