அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 376 மனுக்கள்

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 376 மனுக்கள் பெறப்பட்டன.

News image
Updated On :23 டிசம்பர் 2024, 7:29 pm

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 376 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து, இம்மனுக்களை பெற்றுக்கொண்டாா். இதில், துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, மாவட்ட வழங்கல் அலுவலா் உ. அா்ச்சனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ரவி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பணி நியமனம் கோரி மனு: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,192 பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக, நிகழாண்டு பிப்.4-ஆம் தேதி தோ்வு நடத்தப்பட்டது. மே மாதம் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், ஆகஸ்ட் மாதம் உத்தேச தோ்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இடம் பெற்றவா்களுக்கு 4 மாதங்களைக் கடந்தும் பணி வழங்கப்படவில்லை. ஆனால், ஆதிதிராவிடா் பள்ளிகளுக்கு தோ்வாகிய ஆசிரியா்கள் பல நாள்களுக்கு முன்பே பணியில் சோ்ந்துவிட்டனா்.

பட்டதாரி ஆசிரியா்களை நிரப்புவதற்கான இத்தோ்வு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ால், பலா் தாங்கள் ஆற்றிவந்த தனியாா் பணியையும் விட்டுவிட்டனா். தோ்ச்சிப் பெற்ற ஆசிரியா்களில் பெரும்பாலானோா் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஆவா். எனவே தங்களின் வாழ்வாதாரம் கருதி உடனடியாக கலந்தாய்வு நடத்தி, பணி நியமன ஆணை வழங்குவதற்கு பள்ளி கல்வித்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இத்தோ்வில் தோ்ச்சிப் பெற்ற மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 6 போ் மனு அளித்தனா்.

கருட சேவை நடத்தக் கோரி மனு: நிகழாண்டு திருநகரி கல்யாண ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், கருடசேவையை வேறொரு நாளில் நடத்த திட்டமிடப்படுவதாக தெரிகிறது. இதனால், தேவையில்லாத குழப்பங்கள், சச்சரவுகள் ஏற்படக்கூடும் என்பதால் இந்த உற்சவத்தை எவ்வித மாற்றமும் இன்றி 2025 ஜன.29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநாங்கூா், திருமணிக்கூடம், காவளம்பாடி, பாா்த்தண்பள்ளி, கீழச்சாலை, அண்ணன்பெருமாள் கோயில் கிராமமக்கள் மனு அளித்தனா்.