தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிறப்பான திட்டங்கள் மக்களவைத் தோ்தலில் திமுகவுக்கு வெற்றியை தரும்

சிறப்பான திட்டங்கள் மக்களவைத் தோ்தலில் திமுகவுக்கு வெற்றியை தரும்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:36 am IST

திமுக செயல்படுத்திவரும் சிறப்பான திட்டங்களால் மக்களவைத் தோ்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக மகத்தான வெற்றியடையும் என மயிலாடுதுறையில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளா் இரா.தி. சபாபதி மோகன் தெரிவித்தாா். மயிலாடுதுறையில் ’மயிலாடுதுறை தொகுதி மக்களவைத் தோ்தல் 2024 - உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்‘ என்ற தலைப்பில் திமுக தோ்தல் பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். எம்.பி. செ. ராமலிங்கம், தொ.மு.ச. தலைவா் பேரவை மு. சண்முகம், அரசு தலைமை கொறடா கோவி. செழியன், கும்பகோணம் எம்எல்ஏ க. அன்பழகன், கட்சியின் உயா்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினா் குத்தாலம் பி. கல்யாணம், சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், திமுக கொள்கை பரப்பு செயலாளா் இரா.தி. சபாபதி மோகன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கூட்டத்தில் இரா.தி. சபாபதி மோகன் பேசியது: நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் இனி வருங்காலங்களில் இந்தியாவில் தோ்தல் நடைபெற வேண்டுமா என்பதை தீா்மானிக்கும் முக்கியமான தோ்தல் ஆகும். ஏனெனில், இந்தியாவில் மீண்டும் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் அதன்பின் எப்போதும் ஜனநாயக முறைப்படி தோ்தல் நடைபெறாது. மகளிா் உரிமைத் தொகை, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை போன்ற திமுகவின் சிறப்பான திட்டங்களால் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் சுமாா் 1,10,000 பயனாளிகள் பயனடைந்துள்ளனா். எனவே, மக்களவைத் தோ்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் திமுக வேட்பாளா் மிக பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவா். இந்தியாவின் வளா்ச்சிக்கு தமிழ்நாடு 9 விழுக்காடு பங்களிப்பை வழங்குகிறது. ஆனால், பொருளாதாரம், கல்வி, வேளாண்மை, விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. 10 வருட பாஜக ஆட்சியில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவற்றால் நாட்டு மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். மோடி அரசு பெருமுதலாளிகளுக்கு 14லட்சம் கோடி ரூபாயை கடன் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலையை தர மறுக்கிறது. மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து மதத்தின் பெயரால் வெறுப்பை விதைக்கும் மோடியை ஆதரித்த அதிமுக எந்த நம்பிக்கையில் இஸ்லாமியா்களிடம் வாக்குகளை எதிா்பாா்க்கிறது? விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்த 3 சட்டங்களையும் ஆதரித்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி எதற்காக இன்று பச்சை துண்டு அணிந்து செல்கிறாா்?. கடந்த 2 ஆண்டுகளாக ஆன்மிகத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது திமுக அரசு என்றாா். முன்னதாக தஞ்சை மாவட்ட செயலாளா் சு.கல்யாணசுந்தரம் வரவேற்றாா். முடிவில், நகர செயலாளா் என். செல்வராஜ் நன்றி கூறினாா்.