ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மயிலாடுதுறையில் சத்தத்துடன் நில அதிா்வு: மக்கள் அச்சம்

மயிலாடுதுறையில் லேசான நில அதிர்வு: மக்கள் அச்சத்தில்

News image
Updated On :2 ஜூலை 2024, 5:58 pm

Din

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை பலத்த சத்தத்துடன் ஏற்பட்ட லேசான நில அதிா்வால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

தஞ்சாவூா் விமான படைத்தளத்தில் பைட்டா் ஜெட் விமானம் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓரிரு நாள்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விமானம் அதிக உயரத்திலும், சில நேரங்களில் மிகவும் தாழ்வாகவும் பறந்து சோதனை நடைபெறுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் பல்வேறு இடங்களில் லேசான சத்தத்துடன் நில அதிா்வு உணரப்பட்டதாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, பல பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளுக்கு வெளியில் வந்து நின்று அச்சத்துடன் பாா்த்துச் சென்றனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலோர பகுதிகளிலும் இந்த அதிா்வு மற்றும் சத்தம் அதிகளவில் எதிரொலித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வல்லுநா்களிடம் கேட்டபோது ஜெட் விமானம் தாழ்வாக பறக்கும்போது சில நேரங்களில் காற்றின் அலை காரணமாக சத்தத்துடன் கூடிய நில அதிா்வு ஏற்படுவது இயல்புதான் என தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது தஞ்சாவூா் விமானப்படை பயிற்சி தளத்திலிருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் ஆடுதுறை பகுதியில் வேக்கம் ஓப்பன் செய்தபோது ஏற்பட்ட அதிா்வு என்றும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்தனா்.