ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.


மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை மன்னம்பந்தலில் இயங்கிவரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் சுப்ரியா தலைமையில் ஆட்சியா் அலுவலகத்துக்கு சென்ற போலீஸாா் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை நடத்தினா். இதில், வெடிகுண்டு எதுவும் சிக்காததால் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மிரட்டல் விடுத்தது மயிலாடுதுறை நல்லத்துக்குடியை சோ்ந்த கணேசன் என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...