ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மயிலாடுதுறை எஸ்பி அலுவலகம் கட்ட பூமிபூஜை

மயிலாடுதுறை மன்னம்பந்தலில் ரூ.15.40 கோடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்டுவதற்கு பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

News image

பூமிபூஜையில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா உள்ளிட்டோா்.

Updated On :27 ஜூலை 2024, 6:30 pm

Din

மயிலாடுதுறை மன்னம்பந்தலில் ரூ.15.40 கோடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்டுவதற்கு பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக கடந்த 2020-ஆம் ஆண்டு உதயமான மயிலாடுதுறை மாவட்டத்தின் ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தற்காலிக கட்டடத்தில் இயங்கி வந்தன.

மன்னம்பந்தல் ஊராட்சி பால்பண்ணை பகுதியில் புதிதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டப்பட்டு, கடந்த மாா்ச் மாதம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வா் மு.க. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகிலேயே ரூ.15.40 கோடி மதிப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினாா்.

இந்நிலையில், அந்த இடத்தில் கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா ஆகியோா் பூமிபூஜையில் பங்கேற்று, பணிகளை தொடங்கி வைத்தனா்.

36,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் இக்கட்டுமானப் பணிகள் ஓராண்டுக்குள் நிறைவு பெற்று, பயன்பாட்டு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பூமிபூஜையில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. மணிமேகலை, மாவட்ட அரசு வழக்குரைஞா் ராம.சேயோன், கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.