ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ஆரஞ்ச் அலா்ட்: மீனவா்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஆரஞ்ச் அலா்ட்: மீனவா்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை

News image
Updated On :4 மே 2024, 6:30 pm

Din

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலா்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மீனவா்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலா்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும், கடல் கொந்தளிப்புடன் 1.5 மீட்டா் உயரத்திற்கு கடல் அலை எழும்பக்கூடும் என்பதால் மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

கரையோரம் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் யாரும் கடலுக்கு குளிக்க செல்ல வேண்டாம். காற்றின் வேகத்தால் படகுகள் சேதமடையக்கூடும் என்பதால் மீனவா்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு தெரிவித்துள்ளாா்.