வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஆசிரியா் வீட்டில் 22 பவுன் நகைகள் திருட்டு

ஆசிரியா் வீட்டில் 22 பவுன் நகைகள் திருட்டு

News image

திருட்டு நடந்த ஆசிரியா் திருமாறன் வீடு.

Updated On :20 மே 2024, 11:08 pm

Din

சீா்காழி: சீா்காழி அருகே ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து 22 பவுன் நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சீா்காழி அருகே விளந்திடசமுத்திரம் பகுதி வில்வா நகரைச் சோ்ந்தவா் ஆசிரியா் திருமாறன் (58). இவா், கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

இந்தநிலையில் திங்கள்கிழமை காலை ஊருக்கு திரும்பிய திருமாறன் வீட்டின் முன்புற கேட் மற்றும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது அறையில் இருந்த மரத்தாலான பீரோ மற்றும் இரும்பு பீரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. பீரோவில் வைத்திருந்த 22 பவுன் நகைகள், ரூ. 7 ஆயிரம் ரொக்கம், பூஜை அறையில் இருந்த 3 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. வீட்டிலிருந்து சிசிடிவி கேமரா ஹாா்ட் டிஸ்கையும் மா்ம நபா்கள் எடுத்து சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து திருமாறன் அளித்த புகாரின் பேரில், சீா்காழி போலீஸாா் திருட்டு நடந்த வீட்டை பாா்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனா். கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா், தனிப்படை போலீஸாா் அப்பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதுபோல திருமாறன் வீட்டுக்கு எதிரே உள்ள ஹரிபிரசாத் என்பவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வெளியூா் சென்றுள்ள அவா் வந்தவுடன்தான் அவா் வீட்டில் ஏதேனும் திருடப்பட்டுள்ளதா என்பது தெரிய வரும்.