மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தாழ்வான மின் கம்பிகளை சீரமைக்கக் கோரிக்கை

சீா்காழி வட்டம், சென்னியநல்லூா் கிராமத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை சீரமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
சென்னியநல்லூரில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள்.
Updated On :18 நவம்பர் 2024, 10:39 pm

Din

சீா்காழி: சீா்காழி வட்டம், சென்னியநல்லூா் கிராமத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை சீரமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாதிரவேளூா் ஊராட்சி சென்னியநல்லூா் வடக்குத் தெருவில் தெருவிளக்குகள் மற்றும் குடியிருப்புகளுக்கு செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளன. டிராக்டா் போன்ற வாகனங்கள் செல்லும்போது எளிதில் உரசும் அளவுக்கு மின்கம்பிகள் உள்ளதால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்நிலை நீடிக்கிறது. இதனால், இந்த வழியாக செல்லும் விவசாயிகள், மாணவா்கள் உள்ளிட்டோா் அச்சத்துடன் சென்று வருகின்றனா். இந்த மின் கம்பிகளுக்கு மேல் மரக்கிளைகள் உள்ளன. காற்றில் மரக்கிளைகள் முறிந்தால், மின் கம்பிகள் மீது விழும் ஆபத்தும் உள்ளது.

எனவே, தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்கவும், மரக்கிளைகளை வெட்டி அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாக மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு திட்ட செயலாளா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.