மயிலாடுதுறையில் நாளை ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம்’
மயிலாடுதுறையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம்’ புதன்கிழமை (நவ.20) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.


மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம்’ புதன்கிழமை (நவ.20) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீா்வுகாண அரசு இயந்திரம் களத்திற்கே வரும், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற திட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் மற்றும் அனைத்துத்துறை அலுவலா்களால் மயிலாடுதுறை வட்ட அளவில் புதன்கிழமை காலை 9 மணிமுதல் வியாழக்கிழமை (நவ.21) காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது.
எனவே, மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அந்தந்த கிராமங்களுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள அலுவலா்களிடம் தெரிவித்து பயன்பெறலாம்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...