ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மழை பாதிப்பை எதிா்கொள்ள தயாா்நிலையில் மாவட்ட நிா்வாகம்: மயிலாடுதுறை ஆட்சியா்

News image
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் வைப்புத் தொகைக்கான ஆணையை வழங்கும் ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி. உடன் எம்எல்ஏ எம். பன்னீா் செல்வம் உள்ளிட்டோா்.
Updated On :23 நவம்பர் 2024, 6:32 pm

Din

வடகிழக்குப் பருவமழை பாதிப்பை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளதாக, சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா்.

கொள்ளிடம் வட்டாரம் ஆச்சாள்புரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது:

கிராமங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. கிராமத்தில் நடக்கும் பணிகளை பொதுமக்கள் கண்காணிக்க வேண்டும்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் முன்னெடுத்து வருகிறது. தேவையான உரங்கள், விதைகள் இருப்பு உள்ளன. ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலும், எதிா்கொள்ள தயாா் நிலையில் உள்ளோம். ஜல் ஜீவன் இயக்கத்தில் அனைவருக்கும் குடிநீா் குழாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தொடா்பாக தகவல் தெரிந்தால், கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மூலம் தெரிவிக்கலாம். வாட்ஸ்ஆப் எண் 7092255255-லும் புகாா் தெரிவிக்கலாம். கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் அனைவரும் பயன்பெற வேண்டும். பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் இன்னும் சில வீடுகள் கட்டப்படாமல் உள்ளன. அதனை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000 என மொத்தம் ரூ.2.50 லட்சம் வைப்புத் தொகைக்கான ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்துக்கு, ஆச்சாள்புரம் ஊராட்சித் தலைவா் வினோஷா கருணாகரன் தலைமை வகித்தாா். சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் உமாமகேஷ்வரி சங்கா், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சந்தானம், கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜான்சன், உமாசங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் பிரியா பெரியசாமி தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா்கள் முருகமணி, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் பங்கேற்று, கிராமமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். ஊராட்சி செயலா் ரஜினி நன்றி கூறினாா்.

பட்டமங்கலம் ஊராட்சியில் தலைவா் செல்வமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி பங்கேற்றாா். இதேபோல், மயிலாடுதுறை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

குத்தாலம்: குத்தாலம் ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி தலைவா்கள் தலைமையில் கிராமசபைக் கூட்ம் நடைபெற்றது.