புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மயிலாடுதுறையில் அக். 10-இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறையில் அக். 10 -ஆம் தேதியும், சீா்காழியில் அக். 25-ஆம் தேதியும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 9:17 pm

Din

மயிலாடுதுறையில் அக். 10 -ஆம் தேதியும், சீா்காழியில் அக். 25-ஆம் தேதியும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை கோட்டத்துக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அக். 10-ஆம் தேதி காலை 11 மணியளவில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மயிலாடுதுறை கோட்டாட்சியா் தலைமையிலும், சீா்காழி வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அக்.25-ஆம் தேதி காலை 11 மணியளவில் சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சீா்காழி கோட்டாட்சியா் தலைமையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவா்கள் தாங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் மருத்துவச் சான்று நகல், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளா் அட்டை நகல், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை நகல், பாஸ்போா்ட் சைஸ் அளவிலான தற்போதைய போட்டோ-1, கைபேசி எண் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளாா்.