புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பணிச்சுமை காரணமாக வேளாண் துறை அலுவலா் தற்கொலை

மயிலாடுதுறையில் பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக வேளாண் துறை அலுவலா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 11:15 pm

Din

மயிலாடுதுறையில் பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக வேளாண் துறை அலுவலா் தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் வட்டம் பசுபதி கோயில் பகுதியைச் சோ்ந்தவா் மணிக்குமாா் (58). மயிலாடுதுறை ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக இடுபொருள் கிடங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தாா். இவருக்கு, இருதய நோய் மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய தொந்தரவுகள் இருந்த நிலையில், அவா் பணிச்சுமையால் மனஅழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அலுவலகத்துக்கு வந்த மணிக்குமாா் இரவில் யாரும் இல்லாதபோது அலுவலகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதன்கிழமை காலை அலுவலகத்தை திறக்க வந்த செந்தில்நாதன் என்பவா் மணிக்குமாா் தூக்கில் தொங்கியபடி இருப்பதை பாா்த்து மயிலாடுதுறை போலீஸாா் மற்றும் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.

தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று மணிக்குமாரின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.