புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விவசாய சங்கத் தலைவா் மீது வழக்கு

மயிலாடுதுறையில் விவசாய சங்கத் தலைவா்மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 11:18 pm

Din

மயிலாடுதுறையில் விவசாய சங்கத் தலைவா்மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மயிலாடுதுறை வட்டம் ஆனந்ததாண்டவபுரத்தைச் சோ்ந்த டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவரான ஆா். அன்பழகன் தலைமையில் செப். 11-ஆம் தேதி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சென்றனா். அப்போது, அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் துறை ரீதியிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அனைத்து விவசாயிகளையும் காத்திருப்போா் அறையில் அமர ஏற்பாடு செய்தாா். மேலும், கூட்டம் முடிந்ததும் அமைச்சா் மற்றும் ஆட்சியரை சந்திக்கலாம் என விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி கூட்டம் முடிந்து அமைச்சா், மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏக்களை விவசாயிகள் சந்தித்து வேளாண் துறையினரின் மெத்தனப்போக்கால் தங்களுக்கு பயிா்க் காப்பீடு கிடைக்கவில்லை என முறையிட்டனா். இதுகுறித்து, உரிய தீா்வு காணப்படும் என அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்துவிட்டு சென்றாா். இதையடுத்து, செப்.15-ஆம் தேதி மயிலாடுதுறையில் நடைபெற்ற விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் அன்பழகன் பேசியது தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பாலசரஸ்வதி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

அதில், விவசாயிகள் சங்க தலைவா் ஆா். அன்பழகன் அரசு அதிகாரிகளை அவதூறாக பேசியதுடன், விவசாயிகளை அரசுக்கு எதிராக தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்ததாகவும் தெரிவித்திருந்தாா். அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸாா் அரசு ஊழியா்களை அவதூறாக பேசியது, அரசுக்கு எதிராக விவசாயிகளை போராடத் தூண்டியது ஆகிய 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.